spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக மக்களவை, மாநிலங்களவை நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி நியமனம்!

திமுக மக்களவை, மாநிலங்களவை நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி நியமனம்!

-

- Advertisement -

திமுக மக்களவை, மாநிலங்களவை நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பியை நியமனம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முதலைமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளராக ஆ.இராசா, எம்.பி அவர்களும்; மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும் மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி., அவர்களும் மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., அவர்களும் இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ