spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல- மு.க.ஸ்டாலின்

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறிய அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

we-r-hiring

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித்ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ