Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தலில் வேட்பாளர் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவர்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தேர்தலில் வேட்பாளர் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவர்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

-

தேர்தலில் வேட்பாளர் தோற்றால் மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவர்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் எவராவது தோல்வி அடைந்தால் அந்த பகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலாயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்டவைகள் ஆலோசிக்கப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் எவராவது தோல்வி அடைந்தால் அந்த பகுதியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள். தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களிம் மாற்றப்படுவார்கள். தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ