spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'ஜப்பானிய முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு' - மு.க.ஸ்டாலின்

‘ஜப்பானிய முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு’ – மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

‘ஜப்பானிய முதலீட்டுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு’ – மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் ஜப்பானிய முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image
சென்னை போரூரில் ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாட்சி எனர்ஜி நிறுவனம் அமைத்துள்ள தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எரிசக்தி துறையில் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் இம்மையம் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜப்பான் நாடு முதலீடு செய்வதற்கான உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல பொருளாதார குழுவுடன் ஆலோசித்து பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு எட்டப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் நம்பிக்கை தருவதாக உள்ளது. தொழில் சார்ந்த பல்வேறு கொள்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது” என்றார்.

MUST READ