Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை- மு.க.ஸ்டாலின்

-

திமுக ஆட்சியில் உணவு உற்பத்தியில் சாதனை- மு.க.ஸ்டாலின்

திருச்சியில் வேளாண் சங்கமம் 2023 கண்காட்சியை தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை பார்வையிட்டார். 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கம கணாட்சியில், புதிய வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் இரகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Image

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வேளாண் துறையை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு செயல்படுத்திய திட்டங்களால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-22ல் 119 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை சாதனை படைத்துள்ளோம். உழவர்கள் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைத்து துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று திமுக அரசு உழைத்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளாது. மத்திய அரசை விட அதிகமாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கிறது, இந்தியாவை வழிநடத்தும் வகையில் திராவிட ஆட்சிமுறை செயல்படுகிறது

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உழவர் மகனாகவே மாறிவிட்டார். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வளர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான அவகாசம் ஆக.15 வரை நீட்டிக்கப்படும்” என்றார்.

MUST READ