spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்- காந்திக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்- காந்திக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்

-

- Advertisement -

ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்- காந்திக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்

மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழாவையொட்டி, காந்திஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி! வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர். அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டிற்கே ‘காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

we-r-hiring

அண்ணல் என்றும் மகாத்மா என்றும் இந்த நாடும் பாரும் போற்றும் நமது தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது இலட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, #எல்லார்க்கும்_எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ