Homeசெய்திகள்தமிழ்நாடுஏழைகளின் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது- மு.க.ஸ்டாலின்

ஏழைகளின் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது- மு.க.ஸ்டாலின்

-

ஏழைகளின் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது- மு.க.ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் செலவை பாதியாக குறைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

"விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
File Photo

மாநில திட்டக்குழுவின் அறிக்கையை மேற்கொள் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திமுக அரசு தொடர்ந்து பாடுபடும். மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாக நாளிதழ்கள் பாராட்டியுள்ளன. மக்களை தேடி மருத்துவம் நாட்டிலேயே மிகச் சிறந்த திட்டம் என மாநில திட்டக்குழு உறுப்பினர் அமலோற்பவநாதன் கூறியிருந்தார். திராவிட மாடல் ஆட்சியில் கல்வி மற்றும் மருத்துவத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது. கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் திராவிட மாடல் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் செலவை பாதியாக குறைந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் இதுவரை 2 கோடி மக்களுக்கு மேல் பயனடைந்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழ்நாட்டை பிற மாநிலங்களை விட சிறப்பாகவும், வளரும் நாடுகளுக்கும் இணையாகவும் எடுத்து செல்ல வேண்டும் என்ற தொலை நோக்குடன் திட்டங்களை வகுத்து வருகிறோம்” எனக் கூறினார்.

MUST READ