Homeசெய்திகள்தமிழ்நாடு"எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்" உயர்நீதிமன்றம் உத்தரவு!

“எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

 

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக சம்மந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் மீது பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோரை கைதுச் செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் தலைமறைவான நிலையில், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர், 3 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.

இந்த சூழலில், சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவைப் பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

இந்த மனு இன்று (ஜன.24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே ஜாமீன் வழங்க, சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வழங்க வேண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அனைத்து தரப்பிற்கும் போதிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

MUST READ