தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதி கனமழையும் 15 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடசமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோன்று தென்காசி சிவசைலம் 24 செ.மீ., அயன் தார்மபுரம் மடத்தில் 20 செ.மீ.மழையும், புதுக்குடி 18.5 செ.மீ, , கோவிந்தபேரி 16 செ.மீ., மற்றும் சொக்கப்பட்டி, ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 15 செ.மீ., கொட்டித் தீர்த்துள்ளது.

கடனாநதி 24 செ.மீ., தென்காசி மாவட்டம் சிவகிரியில் 17 செ.மீ., தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
அதேபோன்று ராமநிதி அணை 12 செ.மீ.,மழை பெய்துள்ளது.
மேலும், சேரன்மகாதேவி, ஆய்க்குடியில் தலா 10 செ.மீ., மழையும் அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, சேர்வலாறு அணை, தென்காசியிலும் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பில்லூர் அணை, போடிநாயக்கனூர், காக்காச்சி, கருப்பாநதி அணையில் தலா 8 செ.மீ மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மலைப்பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடம் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


