செங்கம் அருகே குடிசை வீட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் தம்பதி உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மா்ம நபா்கள் குடிசை வீட்டிற்கு தீ வைத்தனா். இதில் வீட்டினுள் இருந்த தம்பதி உயிாிழந்தனா். பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த வேலு, அவரது மனைவி அமிர்தம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அந்த விவசாய நிலத்திலேயே விவசாயம் செய்து வந்துள்ளனா்.
மேலும் அந்த விவசாய நிலத்தின் அருகே குடிசை வீடு கட்டி அங்கேயே வசித்து வந்துள்ளனா். வேலு மற்றும் அவரது மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் கதவை பூட்டிவிட்டு மர்மநபர்கள் குடிசைக்கு தீ வைத்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் பக்கிரிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர். தம்பதியின் உடலை கைப்பற்றி செங்கம் போலீசார் உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனா்.
‘அரிசி’ படத்திற்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய ‘இசைஞானி’



