Homeசெய்திகள்க்ரைம்திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய...

திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

-

- Advertisement -

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

​திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த மூகாம்பிகை நகர் இரண்டாவது வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிலிருந்து நேற்று இரவு கடுமையான துர்நாற்றம் வீசுவதாகத் திருப்பூர் வடக்கு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ​அப்போது வீட்டிற்குள் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையிலும், வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் அழுகிய சடலங்களாகக் கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

​காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் கொடூரம்
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இறந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (27) மற்றும் ஸ்ரீமதி (19) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பெற்றோர்களை எதிர்த்துத் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடியேறியுள்ளனர்.
​வெல்டிங் தொழிலாளியான சரவணக்குமார் திருப்பூரில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். அவரது மனைவி ஸ்ரீமதி பி.எஸ்சி (நர்சிங்) படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். ஸ்ரீமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார்.திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

​வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் தகராறு
“நாம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் குடும்பப் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து எளிதில் மீள வேண்டும்; எனவே நீயும் வேலைக்குச் செல்ல வேண்டும்” என்று கூறி சரவணக்குமார் அடிக்கடி ஸ்ரீமதியுடன் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ​இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சரவணக்குமார், கர்ப்பிணி என்றும் பாராமல் ஸ்ரீமதியைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணக்குமார், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து, உயிரிழந்த மனைவியின் உடலின் அருகிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ​வீடு நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டுக் கிடந்ததாலும், உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசியதாலும்தான் இந்த கொடூரச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்துத் திருமணம் செய்த 4 மாதங்களிலேயே கர்ப்பிணி மனைவி கொலை செய்யப்பட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க வாலிபர் வெட்டிக்கொலை – சிறுவன் உட்பட 8 பேர் அதிரடி கைது!

MUST READ