Homeசெய்திகள்மாவட்டம்போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை…கோவை முழுவதும் 400 போலீசார் அதிரடி சோதனை

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை…கோவை முழுவதும் 400 போலீசார் அதிரடி சோதனை

-

- Advertisement -

கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை…கோவை முழுவதும் 400 போலீசார் அதிரடி சோதனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், பி.ஜி. ஹாஸ்டல்கள், லாட்ஜ்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில், கிலோ கணக்கில் கஞ்சா, மெத்தாம்பெட்டமைன் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பேருந்து மற்றும் ரயில் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் பிரித்து விநியோகிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து இன்று மாலை காவல்துறை விரிவான அறிக்கை வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

MUST READ