spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

-

- Advertisement -

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு!

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

MUST READ