spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

-

- Advertisement -

 

gold price

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்று (ஏப்ரல் 03) காலை 09.00 மணியளவில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 உயர்ந்து, ரூபாய் 52,000- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூபாய் 70 உயர்ந்து, ரூபாய் 6,500- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி கிலோவுக்கு ரூபாய் 2,000 அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 2 உயர்ந்து ரூபாய் 84- க்கு விற்பனையாகிறது.

தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தைத் தொட்டிருப்பது தங்க நகைக்கடையில் மேலும் விற்பனையைக் குறைக்கும் வகையில் அமைந்திருப்பதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ