spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதுரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

we-r-hiring

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது அண்ணன் மகனான துரை தயாநிதியை நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!

தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சாலை மார்க்கமாக கார் மூலம் இன்று (ஏப்ரல் 02) காலை 11.00 மணியளவில் வேலூருக்கு சென்றடைந்தார். பின்னர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சிகிச்சைப் பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அத்துடன், துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், துரை தயாநிதிக்கு உயர்தர அதிநவீன சிகிச்சைகளை வழங்க மருத்துவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.

தேர்தல் அதிகாரியை மிரட்டிய புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

இந்த நிகழ்வின் போது, துரை தயாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரியின் மகன் துரை தயாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ