Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

-

- Advertisement -

சென்னையில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள நலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து, சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோர பகுதிகளிலும், தொடர்ந்து நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை கோவிலம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் இருந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஏரியிலிருந்து பெருமழையிலும் மழை வெள்ளநீர் செல்லக்கூடிய வழித்தடங்கள் தடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தமது சொந்த தொகுதியான  திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மிர்சாப்பேட்டை மார்கெட், அண்ணா சாலை மற்றும் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நள்ளிரவில் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவுப் பொருட்களையும் அவர் வழங்கினார். ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பருவக்கால மழையின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மழைக்கால அவசர பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். பல இடங்களில் நீர் வற்றிவிட்டதாகவும், இருப்பினும் இதைவிட அதிக மழை வந்தாலும் மழைநீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு உள்ளதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி கூறினார்.

இந்த ஆய்வு தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களிடம் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும், கடந்த முறை மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

MUST READ