spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை..!!

ஒரே நாளில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை..!!

-

- Advertisement -
தங்கம் சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3000 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.90,000க்கும் கீழ் குறைந்தது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அண்மையில் ஒரு சவரன் ரூ. 97 ஆயிரத்தை தாண்டி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நகை வியாபாரிகள் கூறி வந்தனர். அதற்கேற்ப அசுர வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நடுத்தர வர்க்கத்தினரை கலக்கமடையச் செய்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக , குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் இன்று(அக்.28) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து , ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதாவது தங்கம் விலை மாலையில் சவரனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 88,600க்கும், கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,075க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,000 வரை சரிந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ