தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி) காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை இறப்பு. மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. இது குறித்து மருத்துவரின் விளக்கம்.
தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி) உள்ள குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். எதிர்பாராத விதமாக அந்த குழந்தை இறந்து விட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் இறந்துவிட்டதாகவும் குழந்தை இறந்ததற்கான சரியான காரணத்தை சொன்னால் மட்டும் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இது குறித்து எக்மோர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் எழிலரசியை தொடர்பு கொண்டபோது…
இறந்த ஜஸ்வந்த் என்ற மூன்றரை வயது குழந்தைக்கு பியரி ராபின் எனும் கீழ் தாடை வளர்ச்சி குறைபாடு பிரச்சனை இருந்தது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கே சிரமப்படுவார்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் இறக்கும் அபாயம் உள்ளது. அதற்கு சிகிச்சை பெற தான் ஜஸ்வந்தயை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இயல்பாகவே தாடை வளர்ச்சி குறைபாடு இருந்தால் நாக்கு தொண்டைப் பகுதியை அடைத்து மூச்சு திணறலை ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சனை ஜஸ்வந்த்க்கும் இருந்து வந்தது. வியாழன் அன்று ஸ்கேன் எடுத்து முடித்ததும் ஜஸ்வந்த் ஒரு பக்கமாக திரும்பி படுத்துள்ளர். அப்போது அவரின் நாக்கு பகுதி தொண்டையை அடைத்து திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே உடனடியாக மருத்துவர்கள் ஜஸ்வந்த்திற்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்க தொடங்கினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என்று மருத்துவமனை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.