Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா

எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா

-

எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என திமுக திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

Image

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி் சிவா எம்பி, “எதிர்க்கட்சி தலைவர், ஒரு பெரிய கட்சியின் தலைவர் மீதான அவதூறு வழக்கை நான்கு ஆண்டுகள் இழுத்தடித்து, தீர்ப்பு வந்ததும் மறுநாளே அவரது பதவியை பறிப்பதற்கு அவசரம் என்ன? இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி விவாதிக்க இருக்கிறோம். அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறோம். ராகுல் விவகாரமும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலிக்கும்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு. தங்களுக்கு ஆகாத எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகள் எதிர்கால ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிவிடும்” என்றார்.

MUST READ