spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு!

-

- Advertisement -

 

'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
Photo: Minister Amit Shah

வெள்ள நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று (ஜன.13) சந்திக்கவுள்ளது.

we-r-hiring

புதுச்சேரியில் வேட்டையன் படப்பிடிப்பு… ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்…

டெல்லியில் இன்று (ஜன.13) பிற்பகல் 03.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் வைகோ, காங்கிரஸ் கட்சியில் ஜெயக்குமார், வி.சி.க.வின் ரவிக்குமார், சுப்பராயன், நவாஸ் கனி உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.

அப்போது, தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையான 37,907 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தவுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு வட மாவட்டங்கள் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் கடந்த டிசம்பர் மாதம் கனமழை வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்…. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!

வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிவாரணம் கோரியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ