spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

“எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

-

- Advertisement -

 

"நீட் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: CM MKStalin

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

“காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும்”- வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தல்!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு என்ற இருகுறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன், உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் நாளை ‘பந்த்’- தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ