spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது - முத்தரசன்!

பாஜக அரசு பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது – முத்தரசன்!

-

- Advertisement -

mutharasan

மத்திய பாஜக அரசு தற்போது பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம் என்பது தெளிவாகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக ராஜபாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏமற்றும் அமைச்சர் பதவியை இழந்தார்.  தீர்ப்பை எதிர்த்த முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமானம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரைத்த நிலையில், அதற்கு ஆளுநர் மறுப்பு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர் நாளைக்குள்  (இன்றைக்குள்)முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே நிலுவை மசோதாக்கள் குறித்த வழக்கில் ஆளுநர், அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி  உள்ளது.

அதன்பின் முதல்வர் ஆளுநரை சந்தித்து பேசினார். ஆனால், நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போலவே ஆளுநரின் செயல்பாடு தொடர்கிறது. ஆளுநர் சட்டத்தை மதிப்பவர் என்றால் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லை என்றால் குடியரசு தலைவர்  ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிமுக, பாஜக உடன் சேரவில்லை என்பதால் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.  அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் தான் பாஜகவின் அதிகாரப்பூர்வமான கூட்டணி.

mutharasan

இந்தத் தேர்தல் மத்தியில் ஆள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதால் திமுகவின் தேர்தல்அறிக்கையில் அதற்கான அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளது. அது நாட்டு மக்களின் பிரச்சினைகளை எதிரொளிக்கக் கூடியது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் போது, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். பெட்ரோல் விலை உயர்த்தும்போது, எண்ணெய் நிறுவனங்கள்  முடிவு செய்கிறது என்ற மத்திய பாஜக அரசு தற்போது, பெட்ரோல் விலையை குறைத்திருப்பது நாடகம்” என்பது தெளிவாக்கிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ