spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சிடப்படாது: அமைச்சர் நாசர் திட்டவட்டம்..

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சிடப்படாது: அமைச்சர் நாசர் திட்டவட்டம்..

-

- Advertisement -

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தாஹி’ என இந்தியில் பெயர் அச்சிடப்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது ‘தாஹி’ என இந்தியில் அச்சிட வேண்டும் என்று மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதில், ஆங்கிலத்தில் curd என எழுதி அதன் கீழ் தாஹி என இந்தியில் எழுதுமாறும், வேண்டுமென்றால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

ஆவின் தயிர் பாக்கெட்

we-r-hiring

இது திட்டமிட்ட ஹிந்தி திணிப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தயிர் பாக்கெட்டுகளில் கூட இந்தி திணிப்பு என்பதை அனுமதிக்க முடியாது என கண்டனங்கள் வலுத்தன. இதற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இந்தநிலையில், இந்தியில் தாஹி என்று அச்சிட முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிரானது. இந்தியைச் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் இந்தியில் தாஹி என்று அச்சிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

MUST READ