Homeசெய்திகள்தமிழ்நாடு"என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Video Crop Image

சென்னை செனாய்நகரில் இன்று (அக்.21) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் கருத்துக்களை உடனடியாகத் தெரிந்துக் கொள்ள முடிகிறது. நெகட்டிவ் பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!

தமிழர்களை தலைநிமிர வைக்க பிறந்த இயக்கம் தான் திராவிட இயக்கம், யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல. சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த ஒரு கூட்டம் நினைக்கிறது. இந்தியாவுக்கே எதிரானது பா.ஜ.க. என்பேச்சை லைக் மட்டும் செய்யாமல், ஷேரும் செய்யுங்கள். என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை மேலும் பக்குவப்படுத்துகிறது.

“தினசரி 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும்”- அண்ணாமலை அறிவிப்பு!

நம் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும்; பா.ஜ.க. போல் பொய்யானதாக இருக்கக் கூடாது. கொள்கையெனில், கிலோ என்ன விலை எனக் கேட்கும் கொள்கையற்ற கூட்டம் தான் அ.தி.மு.க. பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல; நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தியது தான் இந்த திராவிட ஆட்சி” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ