Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!

நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!

-

- Advertisement -

 

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நெல்லை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி, சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே, சென்னை எழும்பூர்- நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், தற்போது இந்த ரயில் சேவை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்பர் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.45 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 02.00 மணிக்கு நெல்லையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், பிற்பகல் 03.00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூருக்கு இரவு 11.15 மணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலை நிறுத்தம்!

சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ