
தி.மு.க.விடம் காங்கிரஸ் புதியதாகக் கேட்க விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!
தமிழகத்தில் 21 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க.விடம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை வென்ற 9 மக்களவைத் தொகுதிகள் உள்பட தற்போது போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்குகிறது.
தி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஜன.28) மாலை 03.00 மணியளவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தி.மு.க.வுடன் பேச்சு நடத்தும் முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே தி.மு.க.விடம் காங்கிரஸ் புதியதாக கேட்க விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம் பெற காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!
காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்ட 9 தொகுதிகள்!
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


