சூரியகாந்தி பூக்களால் தென்காசியின் அகரக்கட்டு பகுதி புதிய சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டம் அகரக்கட்டு ,ஆயக்குடி,சுந்தரபாண்டியபுரம்,ஆகிய பகுதியில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை பயிரிட்டுள்ளனர்.அந்த வகையில் சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளன.
தென்காசி மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது குற்றால அருவிகள் தான்.குற்றால அருவிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்ணை கவரும் வகையில் சூரியகாந்தி பூவானது அறுவடைக்கு தயாராகியுள்ளது. மேலும்சுற்றுலாப் பயணிகள் இந்த அகரக்கட்டு பகுதிக்கு வந்து பூக்களை ரசித்து வருகின்றனர்.ஆதலால் அகரகட்டுப் பகுதியானது புதிய சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கிறது.
சூரியகாந்தி பூக்களின் இடையே நின்றுக் கொண்டு புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.அண்டை மாநிலத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து பூக்களை ரசித்து வருகின்றனர்.கேரளா மாவட்டத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அகரக்கட்டு பகுதிக்கு குடும்பங்களுடன் வருகைப் புரிந்தும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.சுற்றுல்லாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலை ஓரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.