Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டு மின் இணைப்புகளுக்கு  கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும் - அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு  கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும் – அமைச்சர் சிவசங்கர்

-

- Advertisement -

வீட்டு மின் இணைப்புகளுக்கு  கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும் -
அமைச்சர் சிவசங்கர்
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின்கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மின்கட்டணம் கடந்த 2022ல் பெரிய அளவில் உயர்த்தப்பட்டது, அதனை தொடர்ந்து 2023ல் 2.18% மும், 2024 ஜூலையில் 4.8%மும் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. வீட்டு மின் நுகர்வோர், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் என்று பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்கட்டணம் உயர்ந்தது.

நிகழாண்டு ஜுலை மாதமும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டது. இதனால், தமிழகத்தில் ஜுலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில்,வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த நபர்தான் காரணம்…. ஆதாரம் இருக்கு …. ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை!

MUST READ