spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. இது அது இல்லை - பொது சுகாதாரத்துறை விளக்கம்.!!

சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. இது அது இல்லை – பொது சுகாதாரத்துறை விளக்கம்.!!

-

- Advertisement -
influenza
சென்னையில் புதிதாக பரவி வருவது வைரஸ் தொற்று இல்லை என மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் நாள்தோறும், 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காய்ச்சலுடன் உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டைவலி, சளி, தலைவலி ஆகிய அறிகுறிகளும் தென்படுவதாக கூறப்படுகிறது.

இந்தவகை காய்ச்சல் பாதிக்குக்கு ஆளாகும் நபர்களில் இருந்து இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படுவதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இருமல், தும்மல் மூலமாகவே எளிதில் அருகில் உள்ளவர்களுக்கு பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், பிற நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

we-r-hiring

 influenza, Fever

இந்த நிலையில் இந்த காய்ச்சல் புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என பொதுசுகாதாரத்துறை விளக்க அளித்திருக்கிறது. அதாவது, “சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மட்டுமே; புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்ஃப்ளூயன்சா வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்; காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

MUST READ