திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்தியா கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர் 6 என்றால் இந்தியாவே மௌனமாகி அம்பேத்கருக்கு நினைவேந்தல் செய்யும் நாளாக இருக்கிறது என்றும் ஆனால் இந்த நாளை குறி வைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக ஆர்எஸ்எஸ் இணைந்து பாபர் மசூதியை இடித்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் டிசம்பர் 6 அன்று ஒருபுறம் அம்பேத்கருக்கு அஞ்சலி மற்றும் மறுபுறம் பதற்றம் என்ற சூழலை பாஜக ஆர் எஸ் எஸ் திட்டமிட்டு உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். ஆர்.எஸ்.எஸ், பாஜக எது செய்தாலும் வரலாற்றை சீர்குலைக்கும் நோக்கில் செய்யப்படுகிறது என்று கூறிய அவர் திருப்பரங்குன்றத்திலும் அவர்கள் இதை செய்து வருவதாக கூறினார்.
காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்த அவர் அது பற்றி தனக்கு தெரியாது என்றும் நாங்கள் திமுகவோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் , அது மட்டும் தான் எங்களுக்கு தெரியும் எனக் கூறினார். இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதாக கூறிய அவர் இந்தியா கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது என தெரிவித்தார்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் ஐவர் குழு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழு திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணியை யாரும் அசைக்க முடியாது என்ற செல்வப் பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி பேசியதாக கூறப்படுவதற்கு ஏதேனும் புகைப்படம் வந்துள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசினாரா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் அப்படி அவர் பேசியிருந்தால் அது அது பற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என செல்வப்பெருந்தகை கூறினார்.
செங்கோட்டையனை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசு, தான் யாரையும் சந்திக்கவில்லை என்றும் ஒரு திருமண நிகழ்வில் செங்கோட்டையனை பார்த்ததாக அவர் கூறினார் மேலும் ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் இருந்தால் நான் வெளியே செல்வதா அல்லது நான் இருக்கிறேன் என்பதற்காக அவர் செல்வாரா என அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை மக்கள் போராடும் நேரத்தில் உதவிய முதல்வருக்கு நன்றி – செந்தில் தொண்டைமான்


