முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185-வது பிறந்த நாளையொட்டி லோயர் கேம்ப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்து மதங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல்வைத்து அஞ்சலி செலுத்தினர்.


தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் நீர்ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தை திருநாளன இன்று ஜான் பென்னிகுவிக்கின் 185- வது பிறந்தநாளை ஒட்டி தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் வெங்கல சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங், தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., ஆகியோர் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இங்லாந்தை சேர்ந்த ஜான் பென்னிகுவிக்கின் உறவினர்களுக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்து, முஸ்லிம், கிறித்தவ என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுகூடி சாதி மத வேறுபாடுயின்றி 100-க்கும் மேற்பட்ட சமத்துவ பொங்கல் வைத்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் பார்வையாட்டு பின் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், நையாண்டி மேளம், என கோலாகலமாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் கண்டு கழித்தனர். இதில் ஜான் பென்னிகுவிக் உறவினர்கள் ஆனந்தமாக கரகாட்டம் ஆடியது அனைவரை ஈர்த்தது. இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் செய்யது முஹம்மது, கூடலூர் நகராட்சி சேர்மன் பத்மாவதி லோகன், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து.


