spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

-

- Advertisement -

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்
மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்வதா கூறியுள்ளார்.

MUST READ