spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்குக- ஓபிஎஸ்

பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்குக- ஓபிஎஸ்

-

- Advertisement -

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்குமாறு திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்குக- ஓபிஎஸ்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி – சேலை வழங்குவது பொங்கல் தொகுப்பு வழங்குவது ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற நடைமுறையாகும்.

we-r-hiring

கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் ரூ.1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் என ஆணையிட்டது. ஆனால், 15 பொருட்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. மேலும், கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தால் மக்கள் எந்த பயனும் அடையவில்லை என்றும், அரசாங்க பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாளினை முன்னிட்டு அனைத்து அட்டைதார்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

MUST READ