Homeசெய்திகள்தமிழ்நாடுராமநாதபுரம் தொகுதியில் போட்டி - வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

ராமநாதபுரம் தொகுதியில் போட்டி – வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

-

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில், சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

MUST READ