spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபரந்தூர் விமான நிலையம் - சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி

பரந்தூர் விமான நிலையம் – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி

-

- Advertisement -

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

we-r-hiring

இந்த நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

 

MUST READ