spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி"- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!

“ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி”- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!

-

- Advertisement -

 

"ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி"- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!

we-r-hiring

திருச்சி மாவட்டம், துறையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளருமான பாரிவேந்தர், “மக்களின் பேராதரவில் வரும் தேர்தலில் பெரம்பலூரில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையைத் தோழமை கட்சியினர் தந்துள்ளனர். நாட்டிற்கு குடும்ப ஆட்சி வேண்டுமா (அ) ஜனநாயக ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

தக் லைஃப் படப்பிடிப்பு தொடக்கம்… சிம்புவின் காட்சிகள் படமாக்கம்…

ஊழல் வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. ஊழலை குத்தகைக்கு எடுத்துள்ளவரே என்னை எதிர்த்து போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையில் கூட்டணி கட்சியினர் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். 1,200 மாணவர்களுக்கு ரூபாய் 118 கோடி செலவு செய்து இலவச கல்வியை அளித்துள்ளேன்.

பிறந்தநாள் கொண்டாடும் சித்தார்த்… சிறப்பு போஸ்டர் ரிலீஸ்…

1,500 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் அளவிலான மருத்துவச் செலவை ஏற்பேன். இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் இந்திய நாட்டின் பிரஜைகள்; எனது சகோதரர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ