spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியதை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமலும், தொகுப்பூதியத்தை உயர்த்தாமலும் தமிழக அரசு இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் மாவட்டந்தோறும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பிரான்ஸ் அதிபருக்கு மசாலா டீ வாங்கிக் கொடுத்து உபசரித்த பிரதமர் நரேந்திர மோடி!

அதைத் தொடர்ந்து, குடியரசுத் தினமான இன்று (ஜன.26) பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்பதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்துள்ளது. அதன்படி, தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 12,105 பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூபாய் 10,000- லிருந்து ரூபாய் 12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பால், பகுதிநேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ