spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெப்சி, கோக், KFC, அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை

பெப்சி, கோக், KFC, அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை

-

- Advertisement -

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து இனி தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு. பெப்சி, கோக், கேஃசி அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமைஅமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழக ஹோட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்கவுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இனி பெப்சி, கோக், KFC போன்ற அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் வாட்டர் பாட்டில்களையும் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படாது. அதேபோல், ஸ்விகி,சொமொட்டோ நிறுவனங்களையும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பளிக்கப்படும். இனி அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்தய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் இசையால் பல படங்கள் ஓடியது…. ஆனா ‘மதராஸி’…. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!

MUST READ