இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அனிருத் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ‘மதராஸி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் கல்லாரக்கல் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். காதல் கலந்த ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை மறுநாள் (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “பல படங்கள் அனிருத்தின் பின்னணி இசையால் ஓடியது. ஆனால் மதராஸி படத்திற்கு அனிருத் இசை தான் கூடுதல் ஹைலைட்டாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அனிருத், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி, தர்பார் ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பதும் இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.