Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியாரின் தாடி மயிருக்கு கூட சமமில்லை – பொன் குமார் கண்டனம்

பெரியாரின் தாடி மயிருக்கு கூட சமமில்லை – பொன் குமார் கண்டனம்

-

- Advertisement -

பெரியாரைப் பற்றி விமர்சிக்க சீமான் எந்த விதத்திலும் தகுதியானவர் இல்லை, பெரியார் தாடியில் இருக்கும் ஒரு மயிருக்கு கூட அவர் சமமில்லை… பெண் உரிமைக்காக போராடியவர் பெண்ணுக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டவர். சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். பகுத்தறிவை இப்படியாக மக்களிடம் புகுத்தியவர். யார் எது சொன்னாலும் நம்பாதே உன் அறிவைக் கொண்டு யோசி என்றவர். அவரது முயற்சியால் தான் இன்று கல்வியில் தமிழகம் உயர்ந்துள்ளது. அதற்கு காரணமானவர் பெரியார் ஆகவே, பெரியாரைப் பற்றி பேசுவதற்கு துளியும் யோக்கிதை இல்லாதவர் சீமான்.

பெரியாரின் தாடி  மயிருக்கு கூட சமமில்லை – பொன் குமார் கண்டனம்விஜய் கட்சி தொடங்கியவுடன் சீமானிடம் இருந்த தம்பிகள் கொஞ்சம் பேர் விஜய்யிடம் சென்று விட்டதால் அவர்களை இழுக்கும் முயற்சியில் சீமான் ஈடுபட்டு வருகிறார். பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு முதல்வர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வீரமணி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சீமான் கேட்கிறார். சீமானுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை சீமானை கண்டித்து விவசாய தொழிலாளர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் தொழிலாளர் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை, ஓய்வூதியம், குடும்பநல நிதி உள்ளிட்டவைகள் வழங்கும் விழா விராலிமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் பங்கேற்ற மாநில தலைவர் பொன் குமார் செய்தியாளர்களிடம் பேசியது:

ஆறாம் வகுப்பில் இருந்து கல்வித்தொகை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அத்தொகையை இரட்டிப்பாக்கி கொடுத்தவர் இன்றைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்றும், மக்களை தேடி மருத்துவம் என்பது போல இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தவர். உயர் கல்வி படிக்கும் மாணவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இதன் விளைவாகத்தான் இன்று தமிழகத்தில் கல்வியில் மிகப்பெரிய புரட்சி நடந்து வருகிறது என்றும், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கல்வி சராசரி விழுக்காடு 26 சதவீதம் ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி சராசரி விகிதம் ஏறத்தாழ 51 விழுக்காடு என்றும், இது எதனால் சாத்தியமானது என்றால் மாநில அரசு மண்ணுக்கேற்ற கல்விக்கு எடுத்த நடவடிக்கையால் என்றும், இன்று இருக்கும் ஒன்றிய அரசு அதை மாற்றும் முயற்சியாக கல்வியை ஒன்றிய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டுள்ளது என்றும் கல்வியாளர் இல்லாதவர்களை கூட துணை வேந்தர்களாக பல்கலைக்கழகத்தில் நியமிக்க முயற்சிக்கிறது என்றும் இது போன்ற செயல்கள் மாணவர்கள் மத்தியில் மத துவேசத்தை தூண்டுவதற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது கண்டனத்துக்குரியது என்றும், தமிழகத்தை பொறுத்தவரை கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது இதனால் வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளது என்றும் கல்வியைப் பொறுத்தவரை மாநில அரசு அதிகாரத்திற்கு விட வேண்டும்.

MUST READ