Homeசெய்திகள்தமிழ்நாடுசித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதியை மறுத்து உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்!

சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதியை மறுத்து உத்தரவிட முடியாது – உயர் நீதிமன்றம்!

-

- Advertisement -

பாமக சார்பில்  நடத்தவுள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதி வழங்க கூடாது என தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு அனுமதியை மறுத்து உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்!செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வரும் மே 11 ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் சித்திரை முழு நிலவு பெருவிழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளாா்.

2013 ம் ஆண்டு பாமக, வன்னியர் சங்கம்  நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவின் கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும்  பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

we-r-hiring

மேலும், மே 5 தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் உடன் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளதால். அனுமதியை மறுத்து மாநாட்டை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என நீதிபதி விக்டோரியா கவுரி தெரிவித்துள்ளாா்.

தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல… முதல்வர் அறிவுரை

MUST READ