Homeசெய்திகள்தமிழ்நாடு"பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்"- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

“பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

-

 

"பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்"- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
File Photo

ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மகளிரணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “ஆளுநர் மாளிகையின் பிரதான முகப்பு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும். ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பில்லாத நிலையில், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது.

தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா…?

பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தது தனி நபரின் முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை. ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ