spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

-

- Advertisement -

இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

we-r-hiring

பிளஸ் டூ பொதுத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 3324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடந்தது. 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். மேலும் 23 ஆயிரத்து 747 தனித் தேர்வுகள், 5026 மாற்றுத்திறனாளிகள் , ஆறு மூன்றாம் பாலினத்தினர் , 90 சிறை கைதிகள் என்று ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 65 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத பதிவு செய்திருந்தனர். இதில் 8. 17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டார்கள். 48,000 மாணவர்கள் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 79 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்று மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருக்கின்றன. மே ஐந்தாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் நீட் தேர்வினை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி ஆன இன்று வெளியிடப்பட இருக்கின்றன.

இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முடிவுகளை வெளியிடுகிறார் . சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு அவர் வெளியிட இருக்கிறார்.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர தாங்கள் படித்த பள்ளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மையக் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

MUST READ