- Advertisement -

டிசம்பர் 19- ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

அயலான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்!
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்து கேட்டுக் கொண்டார்