Homeசெய்திகள்தமிழ்நாடு"பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

“பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

-

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி முகத்தில் தோல்வி பயம் தெரிவதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?”- பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. சரமாரி கேள்வி!

தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது. வெள்ள நிவாரணம் தராமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க.வைக் குறைச் சொல்லத் தகுதியில்லை.

தோல்வி பயத்தின் கோபத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடியின் முகம் காட்டுகிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. தி.மு.க.வை ஒழித்து விடுவேன் என தனது பதவியைத் தாழ்த்தும் வகையில் பிரதமர் பேசியிருக்கிறார்.

தி.மு.க.வைப் பற்றியும், தமிழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். ஒன்றிய அரசின் எந்த திட்டங்களுக்கு தடையாக இருந்தோம் என்பதை பிரதமர் கூற வேண்டும். எந்த திட்டங்களைக் கொண்டு வந்தார்; எதற்கு நாம் தடையாக இருந்தோம் என பிரதமர் கூறியிருக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா?

நடைமேடைக்கு பதிலாக தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியதால் விபத்து!

ஏழை மக்களின் மருத்துவக் கல்வி கனவைச் சிதைக்கும் பலிபீடமான நீட் தேர்வை எதிர்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ