spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நாட்டின் மிகப்பெரிய தேசிய பேரிடரே மோடியின் ஆட்சிதான்"- கி.வீரமணி குற்றச்சாட்டு!

“நாட்டின் மிகப்பெரிய தேசிய பேரிடரே மோடியின் ஆட்சிதான்”- கி.வீரமணி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"நாட்டின் மிகப்பெரிய தேசிய பேரிடரே மோடியின் ஆட்சிதான்"- கி.வீரமணி குற்றச்சாட்டு!

we-r-hiring

சென்னை கொரட்டூரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர் பாலுவை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட கழகத்த்தின் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. வேட்பாளர் டி.ஆர் பாலு எம்.பி, ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ, பி.கே.மூர்த்தி, எம்.டி.ஆர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

பொதுக்கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, “தேசிய பேரிடர் நிதி என்றால் அதற்கு என்ன அர்த்தம். அதற்காக பணம் ஒதுக்குகிறார்கள். ஆனால் இப்போது பெரிய தேசிய பேரிடரே மோடியின் ஆட்சி தான். அந்தப் பேரிடரை நீக்கும் நாள் தான் வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி. இதனை எண்ணிப் பார்த்தால் நிச்சயம் பெரிய அளவிற்கு மாறுதல் வரும்.

தோல்வி பயத்துக்குள்ளான பாஜக… தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – முத்தரசன்!

மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வீட்டிற்கு சென்று வழங்கும்போது இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நின்றுக் கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்து கொண்டிருக்கிறார். பிரதமருக்கு மூத்தவர் குடியரசுத் தலைவரா அல்லது குடியரசுத் தலைவருக்கு மேலே பிரதமர் உள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!

இதை அறிவார்ந்த மக்கள் ஏற்பார்களா. இதுதான் உண்மையான மோடி. பழங்குடியின மக்களை போற்றுவோம் என்று சொல்கிறாரே அவர்தான் வித்தைக்காரர் மோடி; நாட்டின் மிகப்பெரிய பேரிடரே மோடியின் ஆட்சி தான்” என கடுமையாகச் சாடினார்.

MUST READ