Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்

-

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. போராட்டத்தில் பங்கு எடுத்து சிறை சென்ற பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார்.

Image

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம், இவர்கள் யாரும் எந்த தவறும் செய்யாதவர்கள். நெய்வேலியில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் தொடங்க அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் நண்பன் என்று சொல்ல தமிழ்நாடு அரசுக்கு தகுதி கிடையாது.

Image

நெய்வேலியில் நடைபெறுவது என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் அல்ல. மண்ணுக்கான போராட்டம். விளைநிலங்களை காக்கவே நெய்வேலியில் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது. 3வது நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியதை முதல்வர் ஏன் எதிர்க்கவில்லை? மேலும் மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ரூ.78 கோடி ஒதுக்கிய நிலையில் அரசு மெளனம் கலைக்க வேண்டும்” என்றார்.

MUST READ