spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தனிநபர் வரி விலக்கு ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்படும், மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.3000ஆக உயர்த்தப்படும். ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும்.  வருங்கால வைப்பு நிதி 10% ஆண்டுக்கு வழங்க வலியுறுத்தப்படும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 6000-லிருந்து ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். அதே போல் இந்தியா முழுவதும் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தப்படும்.

பெண்கள் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்படும் மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு திருக்குறள் தேசிய நூலாக்க பரிந்துரை நியாவிலைக்க கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும், பொதுத்துறையில் வங்கியில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும். கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

MUST READ