என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.
ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான்…… புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பை அடுத்த நீல்வளையமாதேவி கிராம பகுதியில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிக்காக, 25,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நெற்பயிரை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி, நடந்து வருகிறது.
இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில், என்.எல்.சி. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது, அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பா.ம.க.வினர், காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பல காவல்துறையினர் காயமடைந்ததைத் தொடர்ந்து, கல்வீச்சில் ஈடுபட்ட பா.ம.க.வினர் மீது தடியடி நடத்தப்பட்டது.
ஆர்யா, கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் இணைந்த மற்றொரு நடிகர்!
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சிக் கலைத்தனர். அதைத் தொடர்ந்து வானத்தை நோக்கி காவல்துறையினர், துப்பாக்கியால் சுட்டதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளையும் பிரயோகித்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் எம்.பி. உள்ளிட்டோர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.