Homeசெய்திகள்சினிமாரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான்...... புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான்…… புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

-

சீதாராமம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கிங் ஆப் கோத்தா. இந்தப் படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தை வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கி அட்லூரி சில மாதங்களுக்கு முன்பாக தனுஷின் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெங்கி அட்லூரி மற்றும் துல்கர் சல்மானின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்க இருக்கிறார். துல்கர் சல்மானின் 37 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.

‘லக்கி பாஸ்கர்’ என்ற தலைப்புடன் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒரு போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் நூறு ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான் மகாத்மா காந்தியை போல் சிரிப்பது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ